fbpx

வயதான பிறகும், யார் உதவியும் இல்லாமல் நடக்க வேண்டுமா? அப்போ இந்த காயை அடிக்கடி சாப்பிடுங்க…

ஆளை பார்த்து எடை போடாதே என்னும் வாக்கியத்துக்கு ஏற்ப, பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும், எண்ணற்ற நன்மைகளை கொண்டது தான் சுண்டைக்காய். நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சுண்டைக்காயை சொன்னால் மிகையாகாது.
கசப்பாக இருந்தாலும், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த சுண்டைக்காய் வயிற்றில் இருக்கும் வாயுக்களை அகற்ற பெரிதும் உதவும். அது மட்டும் இல்லாமல், மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவும். நச்சுக்கிருமிகள் உடலில் இருந்து வெளியேற, சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டும் இல்லாமல், எலும்புகளை பலப்படுத்த இதை விட சிறந்த மருந்து கிடையாது. இதனால் வயது அதிகரிக்கும் போது, மறக்காமல் சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள். சுண்டைக்காயில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுவதால் எலும்புகளை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருப்பதில் பெரிதும் உதவும். இதனால் உங்களின் முதிர் வயதில் எழுந்து நடப்பதற்கு கூட நீங்கள் பிறரின் உதவியை நாட வேண்டாம். சுண்டைக்காய் சாப்பிடுவதால், பசி தூண்டப்படுகிறது. இதனால் செரிமான பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் சுண்டைக்காய் சாப்பிட வேண்டும்.

நெஞ்சு சளியை எடுக்கும் ஆற்றல் நிறைந்த சுண்டைக்காய், நாள்பட்ட சளியை கரைத்துவிடும். இத்தனை நன்மைகள் கொண்ட இந்த சுண்டைக்காயை, வாரம் ஒரு முறையாவது குழம்பு வைத்து சாப்பிட வேண்டும். இதனால், மலச்சிக்கல், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சினைகள் விரைவில் குணமாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த சுண்டைக்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு வரபிரசாதம் என்றே சொல்லலாம்.

Read more: வெண்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைய, இதை விட சிறந்த மருந்து கிடையாது.

English Summary

health benefits of often eating turkey berry

Next Post

அதிர்ச்சி...! 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை... பாஜக நிர்வாகி கைது...! கட்சியில் இருந்து நீக்காதது ஏன்...?

Tue Jan 14 , 2025
BJP state executive arrested under POCSO Act for sexually harassing 15-year-old student

You May Like