இந்த காலத்தில், சொத்து சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, ஆரோக்கியமான வாழ்கையை வாழ்ந்தாலே போதும் என்ற நிலை தான் உள்ளது. அந்த வகையில் நாம் ஆரோக்கியமாக வாழ நினைத்தால் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் பாக்கெட் மற்றும் ஜங்க் ஃபுட் ஆகியவற்றை நாம் மறந்து விட வேண்டும். அதற்காக நாம் பசியோடு பட்னியாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
அது மட்டும் இல்லாமல், அதிக விலை கொடுத்து காஸ்ட்லி உணவுகள் சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் அனுதினம் சாப்பிடும் உணவை சத்தானதாக மற்றிகொண்டாலே போதும். அதாவது, காலையில் இட்லி தோசை மட்டுமே சாப்பிடாமல் ஒரு நாள் சுண்டல், பயிறு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். காலையில் நாம் என்ன சாப்பிட்டாலும், குடித்தாலும் அது நம் உடல் ஆரோக்கியத்தில் சில குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.
பொதுவாக நாம் காலையில் குடிக்கும் டீ அல்லது காபி நமக்கு தீங்கை தான் ஏற்படுத்தும். இதனால், காலையில் எழுந்தவுடனேயே டீ, காபிக்கு பதிலாக குடிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஹெல்த் மிக்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்: வேர்க்கடலை, கம்பு, கோதுமை, ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, 5 ஏலக்காய், சுக்கு.
மேற்குறிப்பிட்ட அனைத்து பொருள்களையும் ஒரு கப் அளவு தனித்தனியாக வறுத்து ஆறவைத்து அரைத்து விடுங்கள். ஜவ்வரிசி வறுக்கும்போது மட்டும் அதனுடன் 5 ஏலக்காய் சேர்த்து நன்கு வறுக்கவும். பின்னர் சுக்கை, அதன் மேல் இருக்கும் தோலை நீக்கிவிட்டு அதை தட்டி எடுத்துக் கொள்ளவும். வறுத்து அனைத்தையும் நல்ல பவுடர் பதத்திற்கு அரைத்த பிறகு, நன்றாக சலித்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து, ஈரம் இல்லாத டப்பா ஒன்றில் போட்டு நன்கு மூடி வைத்து விடுங்கள். இந்த பானத்தை நீங்க தினமும் குடிபதால், எலும்பு தேய்மானம், மூட்டு வலி நீங்குவது மட்டும் இல்லாமல், 80 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பு இருக்கும். இந்த பானம் தயாரிக்க, முதலில் கிளாஸ் ஒன்றில், 2 ஸ்பூன் நாட்டு சக்கரை, 1 ஸ்பூன் இந்த பவுடரை சூடான பாலில் கலந்து குடிக்கலாம்.
நீங்கள் பாலுடன் சேர்த்து குடிக்க விரும்பவில்லை என்றால், இதை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கஞ்சு மாதிரியும் காய்ச்சி குடிக்கலாம். இதனால், கை கால் வலி மூட்டு வலி நீங்கும், மலச்சிக்கல் குணமாகும், ரத்தம் சுத்தமாகி புது ரத்தம் ஊறும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும், ஆரோக்கியம் மேம்படும், சருமம் பளபளக்கும், எலும்பு தேய்மானமும் வராது.
Read more: ரத்த சோகை முதல், இதய நோய் வரை தடுக்கும் அற்புத மருந்து; பெண்கள் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்..