fbpx

இன்று கனமழை அலர்ட்!… தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

அண்மையில் பெய்த அதீத கனமழை தூத்துக்குடியையும் நெல்லையையும் புரட்டிப்போட்ட நிலையில், நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று மீண்டும் தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாதன பொருட்களை மக்கள் கவனமாக கையாள வேண்டும் எனவும், குறிப்பாக மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கி குடிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Kokila

Next Post

3 முக்கிய புள்ளிகளுக்கு ED அனுப்பிய சம்மனுக்கு தடை...! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Sat Jan 6 , 2024
சட்டவிரோத மணல் குவாரி வழக்கு தொடர்பாக மூன்று தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அமலாக்க இயக்குனரகம் அனுப்பிய சம்மன்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழங்கப்பட்ட சம்மன்களை எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் ராஜ்குமார், சண்முகம், ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு தடை விதித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான […]

You May Like