fbpx

Alert: சென்னையில் விடிய விடிய கனமழை…! 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று…! மீனவர்களுக்கு எச்சரிக்கை

நள்ளிரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று சில இடங்களிலும், நாளை கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும், நாளை மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 22-ம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 23-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Heavy rain in Chennai since midnight…! Cyclonic winds at a speed of 55 kmph

Vignesh

Next Post

இதை மட்டும் தினமும் செய்தால் போதும்.. உங்களுக்கு பக்கவாதமே வராது!!

Sun Jan 19 , 2025
best home remedy to prevent from stroke

You May Like