fbpx

நீண்ட காலத்திற்குப் பிறகு கோவையில் கனமழை…! தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்…!

தமிழகத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு கோயம்புத்தூரில் கனமழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 6 முதல் 10ம் தேதி வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலத்திற்குப் பிறகு கோயம்புத்தூரில் கனமழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.“தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவாகியுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

English Summary

Heavy rain in Coimbatore after a long time…! Private weather enthusiast Pradeep John reports

Vignesh

Next Post

புதிய பாஜக மாநில தலைவரை தேர்வு செய்த அதிமுக..!! ரேஸில் முந்திய நயினார் நாகேந்திரன்..!! வெளியாகிறது அறிவிப்பு..!!

Sat Apr 5 , 2025
It is said that Nainar Nagendran is set to be appointed as the new state president of the BJP.

You May Like