fbpx

டெல்டா மக்களே அலர்ட்…! இந்த 13 மாவட்டத்தில் இன்று கனமழை…! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்

தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், 13-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், 13-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9, 10 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வரும் 11-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், 12-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 13-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 7, 8-ம் தேதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Heavy rain today in these 13 districts…! Fishermen should not go to sea

Vignesh

Next Post

அசத்தும் இந்தியா...! 2ஜி முதல் 5 ஜி வரை... அனைத்தும் ஒரே பிராட்பேண்ட் உருவாக்க மத்திய அரசு ஒப்பந்தம்...!

Fri Nov 8 , 2024
From 2G to 5G... all in one broadband deal with central government

You May Like