fbpx

வெளுத்து வாங்கும் மழை… மேலும் இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..! முழு விவரம் இதோ

கனமழை காரணமாக ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்காக இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 17-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.‌ தற்பொழுது ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Heavy rain… Two more district schools are closed.

Vignesh

Next Post

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இதை எல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டமாம்..! பண மழை தான்!

Thu Dec 12 , 2024
It is believed that seeing certain things is a good omen, while seeing certain things is a sign that bad things are about to happen.

You May Like