fbpx

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை… எந்தெந்த இடங்களில் தெரியுமா..?

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, வட தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல்‌, தென்காசி, தேனி, வட தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 8-ம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல்‌, தென்காசி, தேனி, வடதமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 9,10 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுஇகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பேசலாம் வா என்று அழைத்த பெண் சென்ற வாலிபரிடம்; அனைத்தையும் பிடிங்கி கொண்டு அனுப்பிய கும்பல்..!

Sat Aug 6 , 2022
தெரியாத எண்ணில் இருந்து பேசிய பெண்ணை நம்பி சென்ற வாலிபரின் பைக், செல்போன் பறித்த நாண்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியது, கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் பிரவீன் (25). இவர் ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் ஏஜெண்ட்டாக வேலை செய்கிறார். இந்நிலையில், இவருடைய மொபைலுக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதியன்று இரவு 10 மணியளவில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. […]

You May Like