fbpx

அதி கனமழை எச்சரிக்கை..!! இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

அதி கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது இவை இன்று மாலை புயலாக மாறக்கூடும். இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக நாளை மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதி கனமழை எச்சரிக்கை..!! இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

மேலும், புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை மாண்டஸ் புயல் கரையை கடப்பதினால் நாளை முதல் வரும் 10ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மாவட்டங்களில் நாளை மற்றும் 9ஆம் ஆகிய இரண்டு தேதிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதல்! பணத்துடன் வீட்டிலிருந்து மாயமாகி காட்டு பங்களாவில் குடியேறிய காதல் ஜோடி!

Wed Dec 7 , 2022
முந்தைய காலங்களில் ஆண் பிள்ளைகளே பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற தயங்குவார்கள். ஆனால் தற்போது இருக்கின்ற இந்த நவீன காலத்தில் பெண் பிள்ளைகள் கூட பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற துணிந்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கிராமத்தைச் சார்ந்த 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் சென்ற நவம்பர் மாதம் 21ஆம் தேதி திடீரென்று வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். மேலும் அவருடைய […]

You May Like