fbpx

Rain: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டத்தில் வெளுக்க போகும் கனமழை…!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று ஒருசில இடங்களிலும், நாளை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19 முதல் 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19ம் தேதி முதல் 21ம் தேதி வரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

Heavy rains expected in 3 districts

Vignesh

Next Post

நோட்...! 2024-25 ஆம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணம்... டிசம்பர் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்...!

Sun Nov 17 , 2024
Class 12th public examination fee for the year 2024-25... to be paid by December 10th

You May Like