fbpx

பள்ளி பாடப்புத்தகத்தில் உதவி எண்கள்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண் குறிப்பிட கோரிய மனு மீது பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், குடிமகன்களின் உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் பள்ளிப் பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண்களை குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பள்ளி அளவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மனுதாரர் கடந்த 2021-ல் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவை தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

English Summary

Helpline numbers in school textbooks… High Court orders action against Tamil Nadu government

Vignesh

Next Post

Seeman | சீமான் சென்ற விமானம்.. தரையிரங்க முடியமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு..!! என்ன ஆச்சு?

Thu Dec 12 , 2024
Seaman's flight was unable to land.

You May Like