fbpx

கருப்பு கலர் கண்ணாடியை மட்டும் கண்பார்வையற்றோர் அணிவது ஏன்..! இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா.?

கண்பார்வையற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். கண்பார்வை உடையவர்கள் சூரிய ஒளியினால் கண் கூசுவது மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றில் இருந்து தவிர்ப்பதற்காக கருப்பு கண்ணாடி அணிகிறார்கள். ஆனால் கண் பார்வை அற்றவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி அணிய வேண்டும்.? என்ற கேள்வி நமக்குள் எழும். இதற்கான அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது.

பொதுவாக கண் பார்வையற்றவர்களால் காட்சிகளை காண முடியாது என்றாலும் அவர்களால் ஒளியை உணர முடியும். மேலும் கண் பார்வை உடையவர்களை விட கண்பார்வையற்றவர்கள் வெளிச்சத்திற்கு அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்களது விழித்திரையில் கூச்சம் மற்றும் எரிச்சல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காகத்தான் கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார்கள்.

மேலும் பார்வையற்றவர்கள் என்று பிறர்க்கு தெரிவிப்பதற்காகவும் கருப்பு கண்ணாடியை அணிகிறார்கள். முழுமையாக கண்பார்வையற்றவர்களுக்கு அவர்களது கண்களில் தூசுக்கள் மற்றும் மாசு படிவதற்கான அபாயம் அதிகமாக இருக்கிறது. அவர்கள் கருப்பு கண்ணாடிகளை அணிவதன் மூலம் இது போன்ற ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம் . மேலும் கண்ணாடி அணிவது பார்வையற்றவர்களின் கண்களை காயங்களில் இருந்து பாதுகாக்கிறது. சில நேரம் அவர்கள் பார்வை தெரியாமல் சில பொருட்களின் மீது இடித்து விடலாம். அப்போது கண்களில் காயம் ஏற்படாமல் இருக்க இவை தடுக்கிறது.

Next Post

’காலில் செருப்பு கூட இல்லாம கமல் கூட’..!! ’எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு போகலாம்னு இருந்துச்சு’..!! சில்க் ஸ்மிதா சொன்ன பகீர் தகவல்..!!

Wed Jan 10 , 2024
தமிழ் சினிமாவில் 80-களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பாக்கியராஜ் என ஏராளமான நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவருக்கு கவர்ச்சி காட்டாமல் நடிக்க வேண்டும் என்பது ஒரு ஆசையாக இருந்ததாம். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அப்படி ஒரு வேடத்தை அவருக்கு பாரதிராஜா கொடுத்தார். இப்படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் முதல் பலரும், சிலுக்கு இதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து […]

You May Like