இந்து பெண்கள் அனைவரும் தங்களது பர்ஸில் கத்தியை வைத்து இருக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அனைவராலும் அறியப்பட்ட, வலதுசாரி அமைப்பின் தலைவர் சாத்வி பிராச்சி, இவர் இந்து பெண்கள் தங்கள் பர்ஸில் சீப்பு மற்றும் உதட்டுச்சாயத்தை வைத்திருக்க கூடாது, ஆனால் தங்கள் பையில் கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகியான இவர், இந்து பெண்கள் தங்கள் பணப்பையில் கத்தியை வைத்திருக்க கற்றுக்கொண்டால், அது ‘ஜிஹாதிகளை’ அவர்களிடமிருந்து விலக்கி வைக்கும் என்று கூறினார்.
ரத்லாமில் செய்தியாளர்களிடம் பேசிய பிராச்சி, “ஜிஹாதிகளை எதிர்கொள்ள பெண்கள் கத்திகளை வைத்திருக்க வேண்டும், சீப்பு அல்லது Lips Stick ஆகியவற்றை பர்ஸில் வைக்கக்கூடாது” என்றார். அனைத்து இந்துப் பெண்களும் முஸ்லிம்கள் தங்கள் மதத்திற்காக ஆச்சாரமாக இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். டெல்லியின் பரபரப்பான ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கை குறிப்பிட்டு, பேசிய அவர், “லவ் ஜிஹாதிகள் உங்கள் கழுத்தை அறுக்க தயாராக இருந்தால், அதற்கு முன் நீங்கள் அவர்களின் கழுத்தை அறுத்துவிடுங்கள்” என்றார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.