fbpx

பொய்களை அள்ளி விடுவதன் மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது ; ராகுல்காந்தி ட்வீட்!!

அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன் மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளில் ஏப்.19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் கூறியதாவது, “ வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.

நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும். ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டவர்கள் யார் என்பதும் நமக்கு தெரியும். அரசியல் தளங்களில் இருந்து பொய்களை அள்ளி வீசுவதன்மூலம் வரலாற்றை மாற்ற முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.

Next Post

பிரச்சாரம் செய்யும்போது பெண்ணை இழுத்து வைத்து முத்தம் கொடுத்த BJP வேட்பாளர்..!! பெரும் பரபரப்பு..!!

Wed Apr 10 , 2024
மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஏப்ரல் 19, 26 […]

You May Like