fbpx

அடித்தது ஜாக்பாட்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38% உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து பரிசீலித்து, இந்த உயர்வினை நடப்பாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 38% உள்ள அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதனால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.2,366 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ள அரசு, எதிர்வரும் காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும் என்று தெரிவித்துள்ளது.

Chella

Next Post

கடலில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் பரிதாப பலி….! சென்னையில் சோகம்…..!

Wed May 17 , 2023
சென்னை திருவொற்றியூர் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்( 20) பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர் படித்து வருகிறார். அதே பகுதி சேர்ந்த ஹரிஷ்(16) என்ற மாணவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவருடன் மேலும் 4 பேர் சேர்ந்து திருவொற்றியூர் தாங்கள் சுதந்திரபுரம் கடற்கரை பரப்பில் நேற்று மதியம் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது ஒரு ராட்சதலை எழுந்தது. அந்த அலையானது 7 பேரையும் உள்ளே இழுத்துச் […]

You May Like