fbpx

தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை..!! வெளியான முக்கிய உத்தரவு..!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியான வியாழன்கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவில், நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு சில்லறை மதுபானக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியாா் மதுபானக் கூடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அன்றைய தினம் மாவட்டத்தில் யாரேனும் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆகஸ்ட் 15ஆம் தேதி டாஸ்மாக் கடை இயங்காது என்பதால், முன்கூட்டியே மதுப்பிரியர்கள் மதுபானத்தை வாங்கிச் செல்ல தயாராகி வருகின்றனர்.

Read More : ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா..? புதிய கார்டு விண்ணப்பிப்பது இவ்வளவு ஈசியா..?

English Summary

All Tasmac shops have been ordered to remain closed on Thursday, August 15, in view of Independence Day.

Chella

Next Post

Alert...! காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

Tue Aug 13 , 2024
Heavy rain is likely in 8 districts today, according to the Chennai Meteorological Department.

You May Like