நம் அழகில் தலைமுடியின் பங்கு முக்கியமானது. என்னதான் முக அழகு மற்றும் உடல்வாகு இருந்தாலும் தலையில் முடி அடர்த்தியாக இல்லை என்றால் அழகு குறைந்ததாகவே தோன்றும். எனவே நமது கூந்தல் ஆரோக்கியம் மிக முக்கியமானது. இதற்காக பியூட்டி பார்லர் மற்றும் சலூன் என செலவு செய்தும் பலன் அளிக்கவில்லையா.? வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த கை வைத்திய முறையை பின்பற்றி பாருங்கள். ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
இந்த ஹேர் டானிக் செய்வதற்கு ஒரு கைப்பிடி அளவு ரோஸ்மேரி இலைகள் ஒரு சிறிய துண்டு லவங்கப்பட்டை மூன்று கிராம்பு இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ரோஸ்மேரி இலைகள் கிராம்பு மற்றும் லவங்கப்பட்டை இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி ஆகியவற்றை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை ஐந்து நிமிடம் நன்றாக கொதித்ததும் அந்தப் பாத்திரத்தை மூடி தண்ணீரின் நிறம் மாறும் வரை கொதிக்க வைக்கவும்.
பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் குளிர வைத்த பின் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டில் எடுத்துக் கொள்ளவும். தினமும் இரவு உறங்குவதற்கு முன்னர் தலைமுடியின் வேர்களில் படும்படி ஸ்ப்ரே செய்துவிட்டு உறங்கவும். காலையில் எழும்பி தலை முடியை கழுவினால் போதும். இந்த முறையை ஒரு வாரம் பின்பற்றி செய்துவர தலை முடி விரைவாகவும் அடர்த்தியாகவும் வளரும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.