fbpx

ஜோ ரூட் – பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய இந்திய அணி..! தோல்விக்கு இதுதான் காரணம்..!

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கரோனா பாதிப்பு எதிரொலி; 5-வது டெஸ்ட் போட்டி ரத்து: இங்கிலாந்து கிரிக்கெட்  வாரியம் அறிவிப்பு | Fifth Test between England and India cancelled,  confirms ECB - hindutamil.in

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 106 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 132 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து வெற்றிபெற இந்திய அணி 378 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

ஜோ ரூட்- பேர்ஸ்டோவ் ஜோடி அபாரம்: உணவு இடைவேளை வரை விக்கெட் வீழ்த்த  முடியாமல் இந்தியா திணறல் | INDvENG Joe root bairstow anchor England 3 for  216 3rd day lunch time break

பின்னர், 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ரூவ்லி களமிறங்கினர். இரு வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜாக் க்ரூவ்லி 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஒலிவ் போப் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

ENGvsIND சதத்தை நோக்கி ஜோ ரூட்.. பேர்ஸ்டோ அரைசதம்..! பெரும் சிக்கலில்  இந்தியா | joe root and jonny bairstow partnership lead england to a big  score in second test

ஒரு கட்டத்தில் 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், அடுத்து வந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 76 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 72 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

ஜோ ரூட்- பேர்ஸ்டோவ் ஜோடி அபாரம்: உணவு இடைவேளை வரை விக்கெட் வீழ்த்த  முடியாமல் இந்தியா திணறல் | INDvENG Joe root bairstow anchor England 3 for  216 3rd day lunch time break

ஜோ ரூட் – பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ்-ஜோரூட் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 378 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-2 என்ற கணக்கில் இந்த தொடரை சமன் செய்துள்ளது.

Chella

Next Post

நுபுர் சர்மாவுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நபர், இதை செய்தால்..! சொத்துக்கள் அனைத்தையும் கொடுப்பேன், வலை வீசும் போலீசார்..!

Tue Jul 5 , 2022
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் வசித்து வரும் ஒருவர், முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை சன்மானமாக வழங்குவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. வீடியோ பதிவிட்ட அந்த நபர் சல்மான் சிஷ்டி என அடையாளம் காணப்பட்டதாக கூறுகின்றனர். அந்த வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை யாராவது கொண்டு […]

You May Like