சர்க்கரை நோய் இன்றைய காலகட்டத்தில் சாதாரண நோயாக மாறிவிட்டது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கூட சர்க்கரை நோய் உள்ளது. இதனால் பலர் அஜாக்கிரதையாக இருந்து விடுகின்றனர். இது முற்றிலும் தவறு. சர்க்கரை அளவை நாம் கட்டாயம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், அது பெரும் பிரச்சனையாகி விடும். அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பல வழிகள் உள்ளது. உதாரணமாக, உணவு முறை, உடற்பயிற்சி, சிகிச்சை, யோகா மற்றும் தியானம் ஆகும்.
சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியது 7 மணி நேர தூக்கம். குறைந்தது 7 மணி நேரம் தூக்கமாவது இருக்க வேண்டும். புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். மேலும், இன்சுலின் செடி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த செடியை நீரிழிவு செடி என்றும் அழைப்பது உண்டு. பல இடங்களில், நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் இலைகள் இயற்கை சிகிச்சையாக பயன்படுத்தப்படுகின்றன.
இன்சுலின் தாவர இலைகளை தவறாமல் உட்கொள்வதால், உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரித்து நீரிழிவு நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும். இது மட்டும் இல்லாமல், இன்சுலின் செடியின் இலைகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால், தொற்று மற்றும் அழற்சியிலிருந்து நமது உடலை பாதுகாக்க உதவும். மேலும், இந்த செடி கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும். இத்தனை நன்மைகள் கொண்ட இந்த செடியின் இலைகளை, அப்படியே சாப்பிடலாம்.
அல்லது அதன் இலைகளை உலர்த்தி பொடி செய்து சாப்பிடலாம். மேலும், இதன் இலைகளை சாறு எடுத்து குடிக்கலாம். ஆனால் இதை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும். ஏனென்றால், இன்சுலின் செடியை மருந்துகளுக்கு ஒரு துணைப் பொருளாக தான் பயன்படுத்த வேண்டும்.
Read more: இரட்டை சுழி இருந்தால், இப்படி ஒரு பிரச்சனை வருமா??