நோய் இல்லாத மனிதனே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அதிலும் குறிப்பாக, சர்க்கரை நோய் பலரை பாதித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சரியான உணவு முறை இல்லாதது தான். உணவை நாம் மருந்தாக எடுத்துக் கொள்ளாததால் நாம் மருந்தை உணவாக சாப்பிட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இப்படி காலம் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிடுவதில் இருந்து தப்பிக்க சிறந்த வழி ஒன்று உள்ளது.
ஆம், சுமார் பதினைந்து மில்லி பவழமல்லியின் இலைச்சாறு இருந்தால் போதும். நீங்கள் சர்க்கரை நோய்க்காக காலம் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்ற அவசியமே இருக்காது. இதற்கு நீங்கள், பதினைந்து மில்லி பவழமல்லியின் இலைச்சாறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதனால், சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ஏனென்றால், பவழமல்லியின் இலைச்சாறில் கசப்புச் சுவை, எளிதில் செரிக்கும் லேசான தன்மை, வரட்சியான குணம், சூடான வீரியம் போன்ற தன்மைகள் உள்ளது. மேலும், இது குடலில் இருக்கும் கிருமிகளை அழித்து விடும். இடுப்பிலிருந்து தொடை வழியாக முட்டி வரை செல்லும் ‘சயாடிகா’ எனும் நரம்பில், பலருக்கு அடிக்கடி வலி ஏற்படும்.
இது போன்ற வலியால் அவதிப்படுபவர்களுக்கு, இந்த இலைச்சாறு நிரந்தர தீர்வை கொடுக்கும். மேலும், செரிமான பிரச்சனைகளான வயிறு எரிச்சல், வயிற்று உப்புசம், குமட்டல், அடிக்கடி வாந்தி, ஏப்பம், மார்பில் எரிச்சலுடன் கூடிய வலி, அதிக வியர்வை, மலச்சிக்கல், மூலம், கல்லீரல், ரத்தம் சார்ந்த கெடுதிகள், மண்ணீரல் உபாதைகள் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நிரந்தர தீர்வை கொடுக்கும்.
Read more: சரும அழகை மேம்படுத்தும் கழுதை பால்.. ஒரு லிட்டர் இவ்வளவு ரூபாயா..? அப்படி இதில் என்ன ஸ்பெஷல்?