ஹாங்காங் நாட்டைச் சார்ந்த பிரபல மாடல் அழகி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரித்து வரும் ஹாங்காங் காவல்துறை அவரது மாமியார் வீட்டில் இருந்து உடல் பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். ஹாங்காங் நாட்டைச் சார்ந்தவர் பிரபல மாடல் அழகி அபி ஷோய். 28 வயதான இவர் பல்வேறு ஃபேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கின்றனர். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவனை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை காணவில்லை என்று அவரது குடும்பத்தார் அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வந்தது. இந்நிலையில் தாய் போ மாவட்டத்தில் மனித உடல் பாகங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அந்த உடல் பாகங்களை கைப்பற்றி மருத்துவ ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ ஆய்வுகளின் முடிவில் இந்த உடல் பாகங்கள் காணாமல் போன மாடல் அழகியின் உடல் பாகங்கள் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தீவிரமாக விசாரணையில் இறங்கிய காவல்துறை அவரது முன்னாள் கணவரின் மீது சந்தேகம் கொண்டு அவரது கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தது. மேலும் அங்கு நடத்திய சோதனையில் பல அதிர்ச்சியான சம்பவங்கள் வெளியாகி காவல்துறையையும் அதிர்ச்சி கொள்ள செய்திருக்கிறது. அவரது கணவரின் வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் மாடல் அழகியின் தலை கால் மற்றும் ஒவ்வொரு உடல் பாகங்களும் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் தயாரிக்கப்பட்டிருந்த சூப்பில் மாடல் அழகியின் விரல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவரது மாமியார் மற்றும் கணவரை கைது செய்துள்ள காவல் துறை சொத்து விவகாரம் தொடர்பாக மாடல் அழகி கொலை செய்யப்பட்டார் என தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.