fbpx

மகிழ்ச்சி…! 2025-ம் ஆண்டு தீபாவளிக்கு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாள் விடுமுறை…!

அடுத்த ஆண்டு தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைப்பது உறுதியாகி உள்ளது.

ஆண்டுதோறும், தமிழக அரசின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள் தவிர, இதர பொது விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படும். அந்த வகையில், அடுத்த 2025-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் தொடர்பான அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களும் 2025-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1-ம் தேதி திங்கள் கிழமை விடுமுறை என்பது வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும். விடுமுறையை பொறுத்தவரை, இந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் பொதுவான சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத் தவிர வேறு அரசு விடுமுறை என்பது இல்லை.

ரம்ஜான், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி பண்டிகை ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். மேலும், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி ஆகியவை வெள்ளி, சனிக்கிழமைகளில் வருவதால் 3 நாள் தொடர் விடுமுறையாக அமைகிறது. மேலும் குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, பக்ரீத் பண்டிகை, மொகரம், கிருஷ்ண ஜெயந்தி சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் வருகிறது.

அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. இதற்கு முந்தைய நாள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். தீபாவளிக்கு மறுநாள் இந்த முறை அரசு பொது விடுமுறை அறிவித்ததை போன்று அக்டோபர் 21ம் செவ்வாய்கிழமை அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே அடுத்த ஆண்டு தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை கிடைப்பது என்பது 90% உறுதியாகி உள்ளது.

English Summary

How many days off will school students have for Diwali in 2025?

Vignesh

Next Post

உங்கள் வீட்டில் சிலந்தி வலை பின்னியிருக்கிறதா? ஸ்பைடர் வெப் நன்மையா தீமையா?

Wed Nov 27 , 2024
Do you have cobwebs in your house? Spider web good or bad?

You May Like