fbpx

அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காத நபர்கள் எத்தனை பேர்…? அரசு அதிர்ச்சி தகவல்..

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு அதிகாரி எனும் பொறுப்பில் அரசு ஒருவரை நியமனம் செய்கிறது. இவர் தலைமையிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருபவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவருடைய கல்வி மற்றும் இதர தகுதிகள் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. மாவட்ட அரசுப் பணியிடங்களில் காலியிடம் ஏற்படும் போது அந்தப்பணியிடத்திற்கு தகுந்த ஆட்களைத் தேர்வு செய்திட விரும்பும் அந்தத்துறை அதிகாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000..! குழப்பங்களை தீர்த்த பின்..! வெளியான முக்கிய தகவல்..!

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அவர்கள் கோரும் தகுதியுடையவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் குறிப்பிட்ட விகிதக் கணக்கின்படி ப்ரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் தொடர்ந்து வேலையின்றி இருந்து வருபவர்களுக்கு அவர்கள் பதிவுமூப்பு மற்றும் அவர்கள் குடும்ப வருவாய் அடிப்படையில் தமிழக அரசு வழங்கி வரும் உதவித்தொகை அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இதுபோல் அரசின் உயர் பதவிக்களுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு தகுந்த ஆசிரியர் மற்றும் அலுவலர்களைக் கொண்டு மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்யும் 95% நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. தற்பொழுது தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 நபர்கள் காத்திருப்பதாக அதர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி; 31.01.2023- ன்படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது வயது வாரியான விவரங்கள்‌ படி, 18 -வயதிற்குள்‌ உள்ள பள்ளி மாணவர்கள்‌ 18,34,243.., 19 முதல்‌ 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள்‌ 28,56,606 ஆகும். மேலும் 31 முதல்‌ 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும்‌ வேலைநாடுநர்களின் எண்ணிக்கை 18,31,903 ஆகும், அதேபோல 46 வயது முதல்‌ 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள்‌ 2,30,165 பேர் உள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,734 பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Vignesh

Next Post

பிப்ரவரி 14, இனி காதலர் தினம் இல்லையா..? பசு அணைப்பு தினம்... மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு...

Thu Feb 9 , 2023
உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ம் தேதியை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாடுமாறு பசுப் பிரியர்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிப்ரவரி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் தான். முதலில் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்ட காதலர் தினம், தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் தான் காதலர் தினம் என்று ஒரு […]

You May Like