fbpx

ஒரே ஆதாரை வைத்து எத்தனை மின் இணைப்பை இணைக்கலாம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…

ஒருவர், ஒரு ஆதார் வைத்து 10 மின் இணைப்புகளுடன் இணைக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாருடன் மின் இணைப்பு குறித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார், அப்போது பேசிய அவர், “பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்பாக இருந்தாலும் மானியங்களும் தொடர்ந்து பின்பற்றப்படும். ஆதாரை இணைக்கும்போது மானியங்கள் ரத்தாவதாக உண்மைக்கு மாறாக பரப்பப்படுகின்றது. எவ்வளவு பேர் சொந்த வீடு, வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள் என்பதற்கான தரவுகள் மின்சார வாரியத்தில் இல்லை. வாடகைதாரர்கள் ஆதாரை இணைப்பதற்கு உரிமையாளர்கள் மறுப்பது குறித்த புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஒரே ஆதாரை வைத்து 10 மின் இணைப்பிலும் இணைக்கலாம். மின் இணைப்பு எண் பெயர் மாற்றாதவர்கள், அவர்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கான வசதிகள் சிறப்பு முகாமில் ஏற்படுத்தப்படும். 2.33 கோடி மின் நுகர்வோரில் 15 இலட்சம் பேர் ஆதார் இணைத்துள்ளனர்.

மின் இணைப்பை வேறு வகைகளில் பயன்படுத்துவதை கண்டுபிடித்தால்தான் சீரமைக்க முடியும். ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். எந்தவித அச்சமும் தேவையில்லை. மின்சார வாரியத்தில் லீக்கேஜை சரிசெய்வதற்காக தான் ஆதார் இணைப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது. பணம் கொடுத்து ஆதாரை இணைக்க வேண்டிய அவசியமில்லை. வாய்ப்புகள் இருக்கும் போது ஏன் வெளியே போக வேண்டும். டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. அவசரமாக ஆதாரை இணைக்க வேண்டும் என வேகப்படுத்த வேண்டியதில்லை. மின்வாரியம் தற்போது 1.59 லட்சம் கோடி கடனில் உள்ளது. இழப்புகளை சரிசெய்யவும், மேம்படுத்தவுமே ஆதார் இணைக்கப்படுகிறது. மாதந்தோறும் மின்கட்டணம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு, அடுத்தடுத்து ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Kathir

Next Post

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்... டாஸ்மாக் நேரம் மாற்றமா!!! முழு விவரம் என்ன?...

Tue Nov 29 , 2022
அரசு டாஸ்மாக்கின் கீழ் தமிழகத்தில் மதுபான விற்பனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் நடத்தக்க வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மதுபான விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருக்க தான் செய்கிறது. மேலும் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளை எங்கும் அமைக்காது என்றும், கடைகளுக்கான […]

You May Like