fbpx

யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி..? தமிழக அரசு சார்பில் மார்ச் 5-ம் தேதி முதல் பயிற்சி…!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 05.03.2025 முதல் 07.03.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது. பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண். பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி /கைபேசி எண்கள்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 8668108141/8668102600/7010143022.

English Summary

How to create a YouTube channel? Training from March 5th on behalf of the Tamil Nadu government

Vignesh

Next Post

CSK-வின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக தமிழக வீரர் நியமனம்!. இனி பிராவோவுக்குப் பதிலாக இவர்தான்!

Wed Feb 26 , 2025
Tamil Nadu player appointed as CSK's assistant bowling coach!. He will now replace Bravo!

You May Like