இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என இரண்டு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 39,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
For More Info: https://drive.google.com/file/d/1SVmJO8mfkRlzFWgVcUFwxbpgY-CNf1Us/view?usp=sharing