fbpx

கோவை அருகே பணியின் போது உயிரிழந்த……! தொழிலாளியை கண்டு கொள்ளாத அப்பார்ட்மெண்ட் மக்கள்…..!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் இருக்கும் மக்கள் பாசத்திற்கும்,பரிவிற்கும் பெயர் போனவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. தமிழகத்தில் மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் மாறுபட்டு அவற்றுக்கு முன்னுதாரணமாக திகழும் கோவையில் பணியின் போது உயிரிழந்த தொழிலாளிக்கு கிடைத்த இறுதியான மரியாதை மனிதநேயம் எங்கே போனது? என்ற கேள்வியை மிக அழுத்தமாக எழுப்பி இருக்கிறது மக்களின் மனதில்.

அதாவது கோவை மாவட்டம் வடவள்ளி வேம்பு அவன்யூ என்ற பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்ட் ஒன்று இருக்கிறது. இங்கே பெயிண்ட் அடிக்கும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அப்போது அவர் மீது சாரம் சரிந்து விழுந்ததால் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்பதற்கு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்களும், உடன் பணியாற்றுபவர்களும் தயங்கி நின்றனர்.

இவரை பணிக்கு இங்கே அமர்த்தியவர்கள் கூட உடலின் அருகே செல்வதற்கு தயாராக இல்லை. சற்று நேரத்தில் அவரது உடலை தூக்கி வந்து அப்பார்ட்மெண்டுக்கு வெளியே உள்ள சாலையில் நாற்காலியை போட்டு அமர வைத்து, அவர் மீது போர்வையை போர்த்தி விட்டு அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலான பின்னரும் உயிரிழந்தவரின் உடல் என்ன ஆனது என்பது தொடர்பாக, அப்பார்ட்மெண்டில் வசிக்கும் யாரும், எந்தவிதமான கேள்வியும் எழுப்பவில்லை என்று கூறப்படுறது. அந்த வழியாக சென்ற மற்ற மக்களும் மனித உடல் ஒன்று சாலையில் அமர வைக்கப்பட்டிருப்பதை பொருட்படுத்தாமல் சென்றனர். ஆகவே அந்த தொழிலாளி அனாதையாக கிடந்திருக்கிறார்.

நீண்ட நேரத்திற்கு பின்னர் வந்த அரசர ஊர்தியின் ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, அவரை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வடவள்ளி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், அவர் அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான சந்திரன் என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு நடுவே சந்திரனின் சடலம் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. பணியின் போது எதிர்பாராத விதமாக படுகாயம் அடைந்த தொழிலாளியை மீட்க முயற்சி செய்யாமலும், உயிரிழந்தவரின் சடலத்தை காமவுண்டுக்குவெளியே சென்று வைக்குமாறு தெரிவித்தும் சக மக்களே மனிதநேயத்தை மதிக்காமல் இருப்பது கொடூரத்தின் உச்சம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

பெற்ற மகன் கண்முன்னே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த காவலர்…..! தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்…..!

Sun May 14 , 2023
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற வனஸ்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவருக்கு சோபனா என்ற பெண்ணுடன் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ராஜ்குமார் காவல் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ராஜ்குமாருக்கும், அவருடைய மனைவி ஷோபனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் […]

You May Like