கேரளா மாநில பகுதியில் உள்ள கொடுங்கையூர் எருக்கஞ்சேரியில் கலா (32), என்பவர் கடந்த 2019ம் ஆண்டு பாலு (35) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர்களிடையே சில நாட்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சென்ற செப்டம்பர் மாதம் 23ம் தேதி கலாவின் இ-மெயில் க்கு ஒரு மெயில் வந்துள்ளது. அந்த பதிவில் கலா மற்றும் அவரது அப்பா பற்றியும் ஆபாச வார்த்தைகளால் திட்டி எழுதப்பட்டு இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கலா, இது பற்றி அந்த பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் தன்னையும் மற்றும் தனது அப்பாவையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மெயில் வந்துள்ளதாகவும், இதனை அனுப்பிய நபரின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் இதனை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி, விசாரணை நடத்தினர். கலாவின் கணவரான பாலுதான் இவ்வாறு , இ-மெயிலை அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து , பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் , தலைமறைவாக இருக்கிற அவரை தேடியும் வருகின்றனர்.