குடும்பத் தகராறு காரணமாக ஐந்து மாத கர்ப்பிணி பெண்ணின் மீது கணவன் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணமான கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அங்கு ராஜன் குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த அவளது கணவன் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறான் இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண்ணை அருகிலிருந்தவர்கள் மீட்டு கிளி நொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது .
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது கிளிநொச்சி மாவட்டத்தின் கரிதாஸ் குடியிருப்பு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயான அந்த பெண்மணிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப விஷயம் சம்பந்தமாக மோதல் ஏற்பட்டிருக்கிறது அப்போது ஆத்திரத்தில் அவரது கணவர் ஐந்து மாத கர்ப்பமாகயிருந்த தனது மனைவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதில் படுகாயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அந்தப் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட அவரது கணவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசாங்கத்திடம் முறையிட்டு வருகின்றனர். மேலும் அந்தக் கணவருக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.