fbpx

’நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை’..!! டிடிவி தினகரன் அறிவிப்பு..!!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், மற்ற கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பாஜக தலைமையில் 3-வது அணியை உருவாக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் உடனான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன். யாருடன் கூட்டணி என்பதை விட வெற்றி கூட்டணியாக நம்முடைய அணி இருக்கும். ஸ்டாலின் டெல்லியை பார்த்து பயப்பட ஆரம்பித்துள்ளார். திமுகவை வீழ்த்தி இந்த முறை வரலாறு படைப்போம். மக்களவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

நெல்லை, தென்காசி தொகுதிகளில் யார் போட்டி..? வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர்..!!

Sat Jan 27 , 2024
நெல்லை தொகுதியில் பா.சத்யா, தென்காசி தொகுதியில் மயிலராஜன் ஆகியோர் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நெல்லை, தென்காசி மக்களவை தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை […]

You May Like