புனேவை தளமாகக் கொண்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனம் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள வவ்வால்களால் நிபா வைரஸ் பரவியதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை 14 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் கணக்கெடுப்பு முடிந்துள்ளது.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் உள்ள வவ்வால்களில் நிபா வைரஸ் ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்று டாக்டர் பிரக்யா யாதவ் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் கண்டறியப்பட்ட இடங்களைத் தவிர, தெலுங்கானா, குஜராத், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசம் ஆகியவை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.