பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை குறிப்பிட்டு அவருக்கு சவால் விடப்படும் வகையில் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், “தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பிரச்னை கிடையாது, கல்வி தொடர்புடையது. வாங்கித் தரமுடியவில்லை, இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். 2018ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி, சுவற்றையெல்லாம் உடைத்துக் கொண்டு திருட்டுத்தனமாகச் சென்றார். வீட்டில் சுவரொட்டி ஓட்டுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார், முடிந்தால் வரச் சொல்லுங்கள். ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார், தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என சவால் விட்டு பேசியிருந்தார்.
முன்னதாக கரூர் மாவட்டத்தில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, ஒருமையில் பேசியது குறிப்பிடத்தக்கது.
Read more : இந்திய இளைஞர்களுக்கு மாரடைப்பு ஆபத்து அதிகம்.. எப்படி தடுப்பது…? நிபுணர்கள் சொன்ன டிப்ஸ்..!