fbpx

குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை…! தமிழக காவல்துறை அதிரடி

பெண்கள் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைகாரர்கள் மற்றும் 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்திய நபர்களை பற்றி காவல்துறை விசாரித்து வருகிறது. மீட்கப்பட்ட பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லத்திற்கும், குழந்தைகளை காப்பகத்திற்கும் அனுப்பப்பட்டனர். அதில் 150 நபர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இனி ஏழை பெண்கள், குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்காக காவல்துறை சார்பில் ஆப்ரேஷன் மறுவாழ்வு என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற பெரும் நகரங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகு தூரங்களில் இருந்து அழைத்து வரப்பட்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் ஆட்கடத்தல் குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிந்தால் 044- 28447701 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் குற்றவாளிகள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

இன்று காலை 10 மணி முதல் தொடக்கம்..! பரணி தீபம் மற்றும் மகா தீபம் காண ஆன்லைன் டிக்கெட்...

Sun Dec 4 , 2022
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வரும் 6ம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. காலை 4 மணிக்கு பரணி தீபத்தை தரிசிக்க 500 ரூபாய் கட்டணம் என்றும், மாலை 6 மணிக்கு மகாதீபத்தை தரிசிக்க 500 மற்றும் 600 என இரண்டு வகை கட்டணங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட்களை annamalaiyar.hrce.tn.gov.in என்ற கோயில் இணையதள முகவரியில் இன்று காலை 10 மணி […]

You May Like