fbpx

டிசம்பர் 31-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை ரத்து செய்தால் ரூ.1,000 பிடித்தம்…! அனைத்து கல்லூரிகளுக்கும் அதிரடி உத்தரவு…!

அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் வெளியேறினால், மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்வதற்காக தற்போது பயிலும் நிறுவனங்களிலிருந்து வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதிக்குள் வெளியேறினால், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் அக்கல்வி நிறுவனங்கள் மாணவருக்கு திருப்பி அளிக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் சேர்க்கையை ரத்து செய்யும்போது அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும் முழுவதுமாக அளிக்க வேண்டுமே தவிர, ரத்து செய்ததற்காக தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது.

அடுத்ததாக CUET, JEE போன்ற பொது நுழைவுத் தேர்வுகள் காலதமாதமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுநுழைவுத் தேர்வை எதிர்கொள்ள தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பலர், முன்னெச்சரிக்கையாக வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். மேலும் மாணவர்கள் தாமதமாக டிசம்பர் 31- ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் சேர்க்கையை ரத்து செய்தால் மட்டுமே அவர்களிடம் சேர்க்கை பணிக்கான கட்டணமாக 1000 ரூபாய் மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடுத்த பயங்கரம்... 9 வயது தான்... பள்ளியில் நடந்த கொடூர சம்பவம்...! பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏ...!

Tue Aug 16 , 2022
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலித்துகள் மீதான வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக கோபமடைந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பனா சந்த் மேக்வால், தனது சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க முடியாத தான், எம்எல்ஏவாக இருக்க உரிமை இல்லை என்று கூறி, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், குடிநீர் பானையைத் தொட்டதற்காக ஜாலோரில் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தலித் […]

You May Like