பொதுவாக யாராவது கர்ப்பமாக இருந்தால், அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை அழகாக பிறக்க வேண்டும் என்பதற்காக, கர்ப்பமாக இருக்கும் நபர்களுக்கு குங்குமப்பூவை, பாலில் கலந்து கொடுப்பார்கள். ஆனாலும், இந்த குங்குமம் பூவை அதிக அளவில் சாப்பிட்டால், உடலுக்கு தேவையற்ற இடையூறுகள் வந்து சேரும் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது இந்த குங்குமப் பூவை அதிகமாக சாப்பிட்டால், நம்முடைய உடலுக்கு என்னென்ன கோளாறுகள் வரும் என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள், குழந்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூவை சாப்பிடுவார்கள்.
இந்த குங்குமப்பூவை நன்றாக காய்ச்சப்பட்ட பசும்பாலில், ஐந்து கிராம் அளவுக்கு மட்டுமே கலந்து சாப்பிட வேண்டும். ஆனாலும், கர்ப்பிணி பெண்கள் என்றாலும், இந்த குங்குமப்பூவை அதிகமாக சாப்பிட்டால், ஐந்து மாதம் போன பிறகு வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல, குங்குமப்பூவை அதிகமாக சாப்பிட்டால், பசியின்மை உணர்வு உண்டாகும். அதோடு செரிமானம் குறித்த பிரச்சனைகள் உண்டாகும். குங்குமப்பூவை அதிகமாக சாப்பிடுவதால், மஞ்சள் காமாலை போன்ற மிகப்பெரிய நோய்கள் வந்து சேரலாம்.
நாள்தோறும் ஐந்து கிராம் அளவிற்கு மேல் குங்குமப்பூவை பாலில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்பது மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.