புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. குறிப்பாக, மகளிர் உரிமை திட்டத்தை பெறுவதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 19 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய தகவல்களை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 19.62 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை, 6.11 லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு, 27.75 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 16.10 லட்சம் முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள், முன்னுரிமை கார்டுகளாக வகை மாற்றப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், வெளி மாநிலங்களில் இருந்து, இங்கு வந்து பணிபுரியும், 15.78 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு அமைச்சர் பெரிய கருப்பன் ஒரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். குடும்ப அட்டை தொலைந்து விட்டால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், மாநகராட்சியில் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக காலம் விரயம் ஆகும், விண்ணப்பத்திற்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் புதிய அட்டை வந்துவிட்டதா என்று பார்ப்பதற்கு 2 அல்லது 3 முறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைய வேண்டும்.
எனவே தொலைந்து போன அட்டைக்கு பதிலாக நகல் அட்டையை ஆன்லைன் மூலமாக பெறுவதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், ஆன்லைன் மூலம் 50 ரூபாய் பணம் கட்டினால் அஞ்சல் துறை மூலமாக வீடுகளுக்கே, அட்டைகள் வந்து சேர்ந்துவிடும். இந்த திட்டத்தின் மூலமாக 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைந்து போன அட்டைக்கு பதிலாக புதிய அட்டையை பெற்றுள்ளனர்.
Read more: Gold Rate: மார்க்கெட் திறந்ததுமே வேலையை காட்டிய தங்கம் விலை..!! ஒரு சவரன் இவ்வளவா..?