fbpx

‘INDIA’ கூட்டணி எடுக்கவுள்ள முக்கிய முடிவு!! பதற்றத்தில் பாஜக!!

டெல்லியில் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்துக்குப் பிறகு பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சியின் தலைவர்களும் சிறந்த முறையில், ஒற்றுமையுடன் செயல்பட்டதாக
தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராகவும் அவரது அரசியல் முறைக்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. இது ஒரு தெளிவான தார்மிக தோல்வி என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் மோடிக்கு இது ஒரு பெரிய அரசியல் தோல்வி. எனினும், அவர் மக்களின் விருப்பத்தை தகர்ப்பதில் உறுதியாக இருக்கிறார் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், நமது அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மாண்புகளையும் அதன் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதிக்கான அடிப்படை உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் அனைத்து கட்சிகளையும் இண்டியா கூட்டணி வரவேற்கிறது. எங்கள் கூட்டணிக்கு அமோக ஆதரவை தந்த இந்திய மக்களுக்கு நன்றி. பாஜகவுக்கும் அவர்களின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு மக்களின் தீர்ப்பு தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் க்ரோனி கேபிடலிசத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குமான தீர்ப்பாகும். மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும்” என்று செய்தியாளர்களிடம் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

Read More:மெக்சிகோவில் புதிய அதிபர் பதவியேற்று 24 மணி நேரம் கூட ஆகல.. நடுரோட்டில் சுட்டுக் கொலை!!

Rupa

Next Post

இந்தியாவில் கடந்த ஆண்டை விட 8 சதவீதம் நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு...!

Thu Jun 6 , 2024
8 percent increase in coal production in India over last year

You May Like