fbpx

அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்த முக்கிய தகவல்…..! செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்…..!

சென்ற 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பல்வேறு தரப்பினரிடமும் பல கோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

பின்னர் இது தொடர்பான வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்தனர் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கு செந்தில் பாலாஜியின் மீது புகார் கொடுத்தவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ரத்து செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் அதன் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த வடக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரித்து வருகிறது. மேலும் அமலாக்க துறையின் சோதனையின் முடிவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மருத்துவமனையில் இருந்தாலும் அமலாக்கத்துறை மற்றும் காவல் துறையின் கண்காணிப்பிலேயே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதற்கு ஆதாரம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறை இதன் அடிப்படையில் தான் அவரை கைது செய்தோம் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்திற்குள் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்க பட்டதுக்கான ஆவணங்களை செந்தில் பாலாஜி பெற மறுத்ததற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது இது செந்தில் பாலாஜி தரப்புக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது.

Next Post

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட்..!! வெளியானது அட்டவணை..!! இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது..?

Tue Jun 27 , 2023
ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு 100 நாட்கள் இருக்கும் நிலையில், தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க போட்டியான அக்டோபர் 5ஆம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர […]

You May Like