fbpx

மிஸ் பண்ணிடாதீங்க…! படித்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வரும் 21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.

பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.06.2024 அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

English Summary

An employment camp is going to be held on the 21st for the educated and unemployed youth.

Vignesh

Next Post

அதிரடி.‌.! 2025 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து கார்களிலும் சீட் பெல்ட் அலாரம் கட்டாயம்...!

Wed Jun 19 , 2024
Seat belt alarm mandatory in all cars from April 1, 2025

You May Like