fbpx

“ஒழுங்கா படி”!. தாய் கண்டித்ததால் விபரீத முடிவு!. 20வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

Suicide: படிக்காமல் விளையாடிக்கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால், மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவி, 20வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு காடுகோடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர்.இவர்களது மகள் அவந்திகா, 15. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். இந்நிலையில், நேற்று மதியம் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த, அவந்திகா பாடம் படிக்காமல் இருந்து உள்ளார். இதை அவரது தாய் கண்டித்தார். அடுத்த மாதம் பொது தேர்வு நடக்க உள்ளதால், ஒழுங்காக படிக்கும்படி அறிவுரை கூறினார். இதனால் தாய் – மகள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவந்திகா, அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார். காடுகோடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Readmore: “முத்தம் ஒன்னு தரலாமா”?. இன்று முத்த தினம்!. காதலர்களே கொஞ்சம் இதையும் தெரிஞ்சுக்கோங்க!.

Kokila

Next Post

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?. நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!

Thu Feb 13 , 2025
When will Sunita Williams return to Earth?. Official information released by NASA!

You May Like