fbpx

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் விவகாரம்.. சுற்றறிக்கைக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து..!! 

அதிக விலைக்கு மதுபானம் விற்றால், ‘டாஸ்மாக்’ ஊழியர்களை, ‘சஸ்பெண்ட்’ செய்வதாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது., தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் செயலர் மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில், 5,408 சில்லரை மதுக்கடைகள் இயங்குகின்றன. இங்கு, 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஊழியர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் நிறுவனம், பெரிய அளவில் வருவாய் ஈட்டுகிறது. மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அதிக விலைக்கு விற்கப்பட்டால், அந்த கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக, புதிய விதியை நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தனிநபரின் செயலுக்கு கூட்டாக தண்டனை விதிப்பது, காலனி ஆதிக்கத்தில் தான் நடக்கும். கூட்டு தண்டனை விதிப்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. கூடுதல் விலைக்கு விற்பதில், தனிநபர் ஈடுபடலாம்; அதில், மற்றவர்களுக்கு தொடர்பு இருக்காது. டாஸ்மாக் நிர்வாகத்தின் சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறுவதாகவும், தொழில் தகராறு சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது. எனவே, சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, சட்ட விரோதமான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. டாஸ்மாக் தரப்பை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மனுவுக்கு நவம்பர் 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Read more ; தூக்கத்தில் கெட்ட கனவுகளா? இது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது.. ஷாக் தரும் ஆய்வு முடிவுகள்!!

English Summary

In a case where Tasmac employees challenged a circular regarding dismissal, the Madras High Court refused to issue an interim order without hearing an explanation from the Tasmac management

Next Post

அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை விவகாரம்.. காவல்துறை சீரழிந்து கிடக்கிறது..!! - அன்புமணி சொன்ன பாயிண்ட்

Tue Nov 12 , 2024
Pointing out that the Supreme Court has condemned the Chennai Metropolitan Police in the Anna Nagar girl rape case, PMK leader Anbumani Ramadoss has severely criticized the Tamil Nadu Police.

You May Like