குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6224 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் பாரஸ்டர், பாரஸ்ட் வாட்சர், உள்ளிட்ட பதவிகளுக்கு கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது. பணியிடங்கள் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, குருப்-4 தேர்வில் 6244-லிருந்து 6724 ஆக காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.