fbpx

குளிக்க, பல்துலக்க மாடுகளின் சிறுநீர்.. சாணம் தான் சன்ஸ்க்ரீம்.. முண்டாரி பழங்குடி மக்கள் பற்றி தெரியுமா?

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை குளிப்பதற்காகவும் சாணத்தை பூசிக்கொள்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

ஆப்பிரிக்கா மகண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு வாழும் பழங்குடியின மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். அத்துடன் பசுக்கள் வெளியேற்றும் சாணத்தை அவர்கள் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீமாக பயன்படுத்துகின்றனர். மாடுகளின் சிறுநீர் குளிப்பதற்கு மட்டுமின்றி வீடுகளில் தெளிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த விசித்திர மக்கள் தறபோதும் வாழ்ந்து வருகின்றனர்.  

அந்த நாட்டில் அன்கோல் வதுசி என்ற இனத்தைச் சேர்ந்த மாடுகள் முண்டாரி பழங்குடியின மக்களிடமே அதிகளவில் உள்ளது. இந்த மாடுகள் 8 அடி உயரம் வரை வளரக்கூடியவை. மேலும், இந்திய மதிப்பில் ரூ. 41,000 விலை மதிப்பு உடையவை. அப்பகுதியில், திருமணங்களின் போது வரதட்சணை பொருளாக இந்த அன்கோல் வதுசி இன மாடுகள் வழங்கப்படுகின்றன.

இதனை அவர்கள் மிகப்பெரும் சொத்தாக மட்டுமின்றி தங்களுடைய கௌரவ சின்னமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த பசுக்களை பாதுகாப்பதற்காக பழங்குடியின மக்கள் இயந்திர துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இந்த மாடுகளின் சிறுநீர் குளிப்பதற்கும், வீடுகளில் தெளிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

பசுக்களின் சிறுநீரில் உள்ள அம்மோனியா பழங்குடியின மக்களின் தலை முடியை ஆரஞ்சு நிறமாக மாற்றியுள்ளது. முண்டாரி பழங்குடி மக்கள் பயன்படுத்தும் அன்கோல் வதுசி என்ற மாடுகள் இறைச்சிக்காக மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றன. இதற்கு அதன் விலை அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகும்.

Read More ; டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : நெதர்லாந்திடம் வீழ்ந்தது இலங்கை!

English Summary

In South Sudan in Africa, cow urine is used for bathing and applying dung.

Next Post

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Wed Nov 13 , 2024
Tamil Nadu Govt Department Vacancy Notification has been published.

You May Like