மத்திய அரசு பட்ஜெட்டை தவிர புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ1,500 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. உலக நாடுகள் இந்தியா மீது மரியாதை வைத்துள்ளது. சமூகநீதியை பற்றி ஸ்டாலின், நாராயணசாமி பேசினார்கள் ஆனால் பிரதமர் மோடியின் சமூக நீதிக்கு உண்மையான எடுத்துக்காட்டு ஓ.பி.கமிஷனுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது தான், பட்டியலின மற்றும் சிறுபான்மை இனமக்களை குடியரசு தலைவராக்கி பாஜக அழகுபார்த்தது.
சமூக நீதி பேசும் தமிழகத்தில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு போக முடியாத சூழ்நிலை உள்ளது பிரச்சினை ஏற்பட்டால் கோயிலை மூடி விடுவார்கள் ஆனால் பட்டியலின மக்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள். 2047 ல் இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தொலை நோக்கு திட்டத்திற்கு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது பாஜக அரசின் சாதனை என மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க மாநாட்டில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு.