தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது.. மகராஷ்டிரா, அசாம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களிலும் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ள்நீர் புகுந்துள்ளதாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது..
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வர பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
வரும் 23-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.