வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அங்கம் வகிக்கும் இந்திய கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது சமத்துவ மக்கள் கழகம். இது தொடர்பாக இன்று நடைபெற்ற அந்த கட்சியின் கூட்டத்தில் அதன் தலைவர் ஏராவூர் நாராயணன் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி பேசியிருக்கிறார்.
சமத்துவ மக்கள் கட்சியின் நடிகர் சரத்குமார் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் சரத்குமார் சினிமா படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதால் அந்தக் கட்சியினைப் பற்றிய செய்திகள் எதுவும் வெளிவருவதில்லை. இந்நிலையில் அந்தக் கட்சியிலிருந்து தனியாக பிரிந்து சென்று புதிய கட்சியாக தொடங்கப்பட்டது சமத்துவ மக்கள் கழகம். இதன் தலைவராக ஏராவூர் நாராயணன் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வைத்து நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பாராளுமன்ற தேர்தலில் திமுக இடம் பெற்றிருக்கும் இந்திய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும் தமிழகத்தில் திமுகவின் நாற்பதுக்கு 40 வெற்றிக்கு ஆதரவாக இருப்போம் என்றும் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர் தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக சிறப்பான எதிர்ப்பு அரசியலை செய்து வரும் திமுக விற்கு தான் பாராளுமன்ற தேர்தலில் தங்களது ஆதரவு என தெரிவித்தார் மேலும் கிடப்பில் போடப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசாணைகளுக்கு எதிராக மீண்டும் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசினார். தமிழக மக்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி வரி பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வரும் மத்திய அரசிற்கும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்.