fbpx

அடுத்த அதிரடி..! இனி வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பரில் வழங்க தடை…! மீறினால் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பரில் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாளில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது, ஏனெனில் அதன் மையில் பல பயோஆக்டிவ் பொருட்கள் இருப்பதால், எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களில் உணவை வைத்து சாப்பிடுவது என்பது ஆரோக்கியமற்ற பழக்கம். உணவு சுகாதாரமாக சமைக்கப்பட்டிருந்தாலும், அது போன்ற உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இந்நிலையில் அச்சிட்ட பேப்பர் மற்றும் காகிதங்களில் உணவை பரிமாறுவதாலும், பார்சல் கட்டுவதாலும் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சமூக பொறுப்புகள் குறித்து அருந்ததி அரசு என்பவர் இயக்கி உள்ள ‘கருப்பு மை’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை நேற்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தூத்துக்குடி மாவட்டத்தில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பொருட்களை அச்சிட்ட பேப்பர்களில் வழங்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி வினியோகம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Also Read: இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மழைக்காலக் கூட்டத் தொடர்…! மொத்தம் 18 அமர்வு… 32 சட்ட முன்மொழிவுகள் எடுக்கப்படும்…!

Vignesh

Next Post

30 வயகுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு.. வரும் 22-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்... அசத்தல் அறிவிப்பு...

Tue Jul 19 , 2022
வரும் 22-ம் தேதி சென்னையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்‌நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மைய அலுவலகங்களிலும்‌, இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக்கிழமைகளில்‌ வேலைவாய்ப்பு வெள்ளி ஆக அனுசரிக்கப்படுகிறது.. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்புகள்‌ பெற்றுவழங்கப்பட்டு வருகிறது. இதன்‌ மூலம்‌ இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக்கிழமைகளில்‌ ஆயிரக்கணக்கான இளைஞர்கள்‌ தனியார்‌ […]

You May Like