fbpx

நெருக்கடி நேரத்தில் போலி செய்திகள் அதிக அளவில் வெளியிடப்படுகிறது…! எல்.முருகன்

,க்ஷஆசியா பசிஃபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் எல். முருகன், நெருக்கடியான காலத்தில் அனைவரும் பின்பற்றும்வகையில் தொலைக்காட்சி செய்தி அலை வரிசைகள் கவனமாகவும் உண்மையானதாகவும் நம்பிக்கை உடையதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“நெருக்கடியான காலத்தில் உண்மை மற்றும் நம்பகத்தன்மை” என்ற உலகளாவிய செய்தி அமைப்பின் மையப்பொருள் மிகவும் பொருத்தமானது என்றும் கொவிட்- 19 பெருந்தொற்று காலத்தில் தகவல் தொற்று என்று குறிப்பிடும் அளவுக்கு நிலைமை இருந்த நிலையில் இதன் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்து உள்ளது என்றார்.

நெருக்கடியான காலத்தில் போலியான செய்திகளும் தவறான தகவல்களும் பரவிக் கொண்டிருந்ததை எடுத்துரைத்த அவர் மறுபக்கத்தில் இந்த மோசமான நிலைமைக்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்குவது சம அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என கூறினார்.

Vignesh

Next Post

14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் விடுத்த அலெர்ட்..!!

Thu Oct 6 , 2022
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 9ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, […]

You May Like