fbpx

மாமனாருடன் தனிமையில் உல்லாசம்.. நேரில் பார்த்த மாமியாரை தீர்த்து கட்டிய கள்ளக்காதல் ஜோடி..!!

உத்தரப் பிரதேசத்தில் மாமனார், மருமகளின் கள்ளத்தொடர்பை அறிந்த மாமியாரின் தலையில் செங்கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கீதா தேவி (50). இவரது கணவர், குர்கு யாதவ் என்பவருக்கும், மருமகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மாமனாரும் மருமகளும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது திடீரென வீட்டிற்கு வந்த மாமியார் இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை மகன் தீபக் மற்றும் அக்கம் பக்கதினரிடம் சொல்லிவிடுவேன் எனவும் மாமியார் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனாரும், மருமகளும் சேர்ந்து கீதா தேவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து செங்கல் மற்றும் மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்தனர்.

பின்னர், இந்தக் கொலையை மறைக்க மாமியாரின் சடலத்தை வீட்டின் கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு, அவரைக் காணவில்லை என நாடகமாடியுள்ளனர். தொடர்ந்து மகன் தீபக், தந்து அம்மாவை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். விசாரணையைத் தொடங்கிய போலீசார், கடந்த சனிக்கிழமை காலை கழிவறை தொட்டியில் கீதாதேவியின் சடலத்தை மீட்டனர். ஆனால், தலையில் பலத்த காயம் காரணமாக அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. பின்னர், மாமனார், மருமகள், மகன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, மாமனார், மருமகள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more ; குழந்தைகளுக்கான ஸ்பெஷல் திட்டம்.. மாதம் ரூ.1000 முதலீடு செய்து கோடிகளை அள்ளலாம்..!!

Next Post

வண்ணக் கோலமிட்டு.. தை மகளை வரவேற்போம்.. தமிழ்த் தாயைப் போற்றுவோம்..!! - முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து

Sun Jan 12 , 2025
Chief Minister M. K. Stalin has congratulated the people of Tamil Nadu on Pongal.

You May Like