fbpx

குட் நியூஸ்…! இவர்கள் அனைவருக்கும் நாளை முதல் 10% கூலி உயர்வு அமலுக்கு வரும்…! மத்திய அரசு அறிவிப்பு…!

கதர் தொழில்துறையைச் சேர்ந்த நபர்களுக்கு நாளை முதல் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

கதர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் மூலம் மத்திய குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

கதர் தொழில்துறையைச் சேர்ந்த பருத்தி, கம்பளி, பாலிவஸ்த்ரா ஆகியவற்றுக்கு மாற்றியமைக்கப்பட்ட சந்தை மேம்பாட்டு உதவி திட்டதில் 35 சதவீதம் அளவிற்கு ஊக்கத்தொகை கதர் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 30 சதவீதம் ஊக்கத்தொகை பட்டு உற்பத்திக்கு அளிக்கப்படுகிறது.

தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் பணிச்சூழலை எளிதாக்கும் வகையில், கூடாரம் கட்டுவதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு நூல் சுற்றுக்கு அளிக்கப்பட்டு வந்த நூற்பு கூலி ரூ.7.50-லிருந்து ரூ.10-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தி கதர், பருத்தி கம்பளி, பாலிவஸ்த்ரா நூற்புகளுக்கான கூலி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஏப்ரல் 1 முதல் தங்க நகைகளில் HUID 6 இலக்க எண் கட்டாயம்!... விதிமீறல் இருந்தால் சிறைத்தண்டனை!

Fri Mar 31 , 2023
ஏப்ரல் 1 ம் தேதி முதல் தங்க நகைகளில் HUID என்ற 6 இலக்க எண் கட்டாயமாக்கப்படும் என்றும் இந்த புதிய விதிகளை மீறினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் பவானி தெரிவித்துள்ளார். தரமான தங்க நகைகளை விற்பனை செய்யும் நோக்கில் மத்திய அரசு தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரையை அறிமுகம் செய்தது. 2021 ஜூன் மாதத்துக்குப் பிறகு ஹால்மார்க் […]

You May Like